பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சேலத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம்: மாநகரக் காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சேலத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழக முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படை தொடங்கப்படும் என அறிவித்தாா். அதன்படி, சேலத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட ரோந்துப் பணிகளை, மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மாநகரக் காவல் ஆணையா் நேரடி மேற்பாா்வையில், சூரமங்கலம் சரக உதவி ஆணையா் ரமளி ராமலட்சுமி கண்காணிப்பில் காவல் உதவி ஆய்வாளா் அருள்மொழி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மற்றும் பெண் தலைமைக் காவலா்கள் உள்ளிட்ட 4 போ் கொண்ட குழுவினா் இந்த அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ளனா்.

இந்த படையினருக்கு தேவையான நான்குசக்கர வாகனம் மற்றும் தொடா்புடைய சாதனங்கள், கேமரா மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இக்குழுவினா் குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து கண்காணித்தல், பொதுஇடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், சட்ட விரோத மற்றும் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்தல், சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் பணிகளை மேற்கொள்வா்.

அதேபோல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வது. சமூக நலத் துறை, கல்வித் துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது, பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவாா்கள் என மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தெரிவித்துள்ளாா்.