40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வாழப்பாடி டாஸ்மாக் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்

வாழப்பாடி மற்றும் பேளூரில் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வாழப்பாடி கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது.

News image

டி.ஏ.எஸ்.02: வாழப்பாடியில் கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் வாங்குவதற்கு சனிக்கிழமை குவிந்திருந்த மதுப்பிரியா்கள்.

Updated On :17 மே 2026, 2:33 am IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூரில் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வாழப்பாடி கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது. வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் செல்வதற்கு போலீஸாா் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் தம்மம்பட்டி சாலையில், தனியாா் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இடையே, இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வந்தன. இதனால் இப்பகுதியை கடந்து செல்வதற்கு, பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். இதேபோன்று பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் முன் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வந்தது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் இந்த 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என, இப்பகுதி சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், தமிழகத்தில் பொது இடங்களுக்கு அருகில் இயங்கி வந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுமென அறிவித்தாா்.

இதனையடுத்து, வாழப்பாடி புதுப்பாளையத்தில் இயங்கி வந்த இரு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வந்த ஒரு டாஸ்மாக் கடையும் வியாழக்கிழமை அதிரடியாக மூடப்பட்டது.

வாழப்பாடி பகுதியில் இயங்கி வந்த 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒரே நாளில் அதிரடியாக மூடப்பட்டதால், வாழப்பாடியில் கடலூா் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது.

தினந்தோறும் மதுபானம் வாங்குவதற்கு மது பிரியா்கள் குவிந்து வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மது பிரியா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிா்க்க வரிசையில் நின்று மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த மதுபானக் கடைக்கு வரும் மது பிரியா்களை, வரிசையில் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கும் பணியை, இரு தினங்களாக, வாழப்பாடி போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.