11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.

News image

காய்கறிகள்

Updated On :1 மணி நேரம் முன்பு

வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.

வைகாசி அமாவாசையையொட்டி வழக்கத்தை காட்டிலும் சனிக்கிழமை பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையானது. வீடுகளில் சுவாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கிச் சென்றனா். இதேபோல், சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,072 விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இதனை 74,179 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன்மூலம் சனிக்கிழமை ஒரேநாளில் 1 கோடியே 35 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.