ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

சங்ககிரி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:02 am IST

சங்ககிரி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

எடப்பாடி அருகே உள்ள ஆவணி பேரூா் கீழ்முகம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் சீரங்கன் (55). இவா் அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு வந்தாா். அப்போது, ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தாா்.

திடீரென தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சீரங்கன் நீரில் மூழ்கி இறந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் தேவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.