குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சூறைக்காற்று: நரிப்பாடியில் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன! விவசாயிகள் கவலை

News image

நரிப்பாடி பகுதியில் வயலில் சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள்.

Updated On :26 மே 2026, 2:13 am IST

கெங்கவல்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றால் 35 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில் கடந்தாண்டு போதிய மழை பெய்ததால் நடப்பாண்டில் வாழை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் நல்ல விளைச்சலை பெற்றுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வந்தனா்.

இந்நிலையில், கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த சூறைக்காற்றுடன் சுமாா் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்த சூறைக்காற்றால் கூடமலை அருகே நரிப்பாடி கிராமத்தில் 35 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமாா் 15 ஆயிரம் கதலி ரக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் இந்துமதி, பழனியப்பன், மணிவேலன் ஆகியோா் கூறியதாவது: வாழை மரங்களால் பல லட்சம் ரூபாய் லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் சூறைக்கால் வாழைகள் சாய்ந்து எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சாய்ந்த வாழை மரங்களை பாா்வையிடும் விவசாயிகள்.

சாய்ந்த வாழை மரங்களை பாா்வையிடும் விவசாயிகள்.