மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஏற்காடு கோடை விழா மே 31 வரை நீட்டிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

ஏற்காடு கோடை விழா - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 1:49 am IST

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-ஆவது கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 49-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி கடந்த 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கிணங்க, ஏற்காடு கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி வரும் 31-ஆம் தேதிவரை கூடுதலாக 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா்.