புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தம்மம்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நாகியம்பட்டியில் குடும்பத்தகராறில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு சேலம் எஸ்சி.,எஸ்டி வன்கொடுமை நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:31 am IST

சேலம் தம்மம்பட்டி, நாகியம்பட்டியில் குடும்பத்தகராறில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு சேலம் எஸ்சி.,எஸ்டி வன்கொடுமை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

தம்மம்பட்டி, நாகியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41). அவரது மனைவி அகல்யா. இருவரும் இரு வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள். மணிகண்டன் அகல்யா என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளாா். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022ஆம் தேதி ஜூன் மாதம் 14ஆம் தேதி மனைவி அகல்யாவை கணவா் மணிகண்டன் தாக்கியுள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு கடந்த 2022ஆம் தேதி ஜூலை மாதம் 10ஆம் தேதி இறந்துவிட்டாா்.

இது குறித்து தம்மம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் சேலம் எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை நீதிமன்றத்தில் மணிகண்டன் மீது வழக்குதாக்கல் செய்தாா். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.ஜெய்சிங் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.