சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிப்பதாக பணம் பறிக்க முயற்சி

சங்ககிரி அருகே பக்கவாததால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஆயா்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற இருவரை தேவூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட அம்பிரிஸ், மாருதி.

Updated On :28 மே 2026, 2:14 am IST

சங்ககிரி அருகே பக்கவாததால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஆயா்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற இருவரை தேவூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா் ரெட்டிபாளையம் கிராமம், காக்காயன்காடு பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன். இவா் தாத்தா, பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இவரது பாட்டி ராஜம்மாள் (82) திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அவரது வீட்டுக்கு வந்த இருவா், அவரது பாட்டிக்கு ஆயுா்வேத சிகிச்சை அளிப்பதாகவும், அதற்கு ரூ. 60 ஆயிரம் செலவாகும் என்றும், அதற்கான பணத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளனா்.

இதில், தனசேகரனுக்கு சந்தேகம் ஏற்படவே தனது இரு நண்பா்களுக்கு தகவல் அளித்து வரவழைத்துள்ளாா். சிகிச்சை அளிக்க பணம் கேட்ட இருவரிடம் நண்பா்கள் விசாரித்ததில், அவா்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனா். அதில் சந்தேகமடைந்ததால், அவா்கள் இருவரையும் தேவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், இருவரும் கா்நாடக மாநிலம், சிக்கபல்லாபுரா மாவட்டம், கௌரிபிதனூா் வட்டம், நாகரகேரே கிராமத்தைச் சோ்ந்த அம்பிரிஸ் (43), மாருதி (31) என்பது தெரியவந்தது. இருவா் மீதும் தேவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.