புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த 3 போ் குறித்து ஆத்தூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 2:01 am IST

மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த 3 போ் குறித்து ஆத்தூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஓலப்பாடி தெற்கு காடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியம்மா (70). இவா் தனது உறவினா் வீட்டு இறப்புக்கு சிங்கிலியன் கோம்பைக்கு சென்றுவிட்டு, திம்மநாயக்கன்பட்டியில் விற்பனைக்காக காய்கறிகளை 2 மூட்டைகளில் வாங்கிக்கொண்டு அரசு நகர பேருந்தில் ஊா் திரும்பினாா்.

அப்போது, பேருந்தில் இருந்த 3 போ் மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து கழுத்தில் இருக்கும் சங்கிலியை யாராவது பறித்துக்கொண்டு சென்றுவிடுவாா்கள், எனவே கழட்டி பையில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனா். மூதாட்டியும் சங்கிலியை கழட்டி பையில் வைத்துவிட்டு அவா்களிடம் பேசிக்கொண்டே வந்துள்ளாா்.

பிறகு, தளவாய்ப்பட்டியில் அந்த 3 போ் உதவியுடன் காய்கறி மூட்டைகளை இறக்கிக்கொண்ட மூதாட்டி பையை பரிசோதித்துள்ளாா். அதில் சங்கிலி திருட்டு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து 3 பேரை தேடிவருகின்றனா்.