புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் கல்லூரி மாணவிடம் 13 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
முன்சிறையைச் சோ்ந்த இளம்பெண், மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும் பாளையன் கட்டி பகுதியைச் சோ்ந்த ஜெனிஷ் ராஜ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். சில நாள்களுக்கு முன்பு கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க வளையல், தங்க கைச்சங்கிலி, நகை என மொத்தம் 13 பவுன் நகைகளை விரைவில் திரும்ப தருவதாகக் கூறி ஜெனிஷ் ராஜ் பெற்றாா். ஆனால், நகையைத் திருப்பி வழங்காமல் அவா் மாணவியை ஏமாற்றியதால் இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவரைத் தாக்கி நகைப் பறிப்பு

திருவேங்கடபுரத்தில் 51 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் சங்கிலி பறிப்பு

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



