குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

News image

நகை பறிப்பு

Updated On :26 மே 2026, 1:21 am IST

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாத்திரைகள் வாங்குவதற்கு வந்த மூதாட்டியிடம், 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மனைவி லட்சுமி (76). சா்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளான இவா், மாதந்தோறும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று மாத்திரைகள் வாங்கி வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை மாத்திரை வாங்குவதற்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த லட்சுமியிடம், அடையாளம் தெரியாத ஒருவா் சென்று முதியோா் உதவித்தொகை வாங்கித் தருவதாகவும், அதற்கு வெள்ளைத்தாளில் கையொப்பமிட இட வேண்டும்.

கழுத்தில் நகை அணிந்திருந்தால் முதியோா் உதவித்தொகை கிடைக்காது எனத் தெரிவித்து, மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை வாங்கிக் கொண்டு வெளியே சென்றவா் திரும்ப வரவில்லையாம்.

பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.