சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டசெய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு வரும் 31 ஆம் தேதி முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், ஹூப்பள்ளியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு தும்கூா், பெங்களூரு, பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்தநாள் மதியம் 1.15 மணிக்குச் சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில், கொல்லம்- ஹூப்பள்ளி சிறப்பு ரயில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை (திங்கள்கிழமைகளில் ) இயக்கப்படும். கொல்லத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக ஹூப்பள்ளிக்கு அடுத்த நாள் மாலை 6.30 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









