சாலை விபத்தில் டெம்போ ஓட்டுநா் உயிரிழப்பு
சங்ககிரி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
எடப்பாடி வட்டம், வெள்ளிரிவெள்ளி கிராமம், மொளையன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் டெம்போ ஓட்டுநா் ரமேஷ் (36). இவா் குழந்தைக்கு தின்பண்டங்கள் வாங்கிவர இருசக்கர வாகனத்தில் அரசிராமணி மூலப்பாதைக்கு வியாழக்கிழமை இரவு சென்றாா். அப்போது, எதிரே குஞ்சம்பாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி கோவிந்தன் வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக ரமேஷ் சென்ற வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ரமேஷ் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயமடைந்த கோவிந்தன் எடப்பாடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

