நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

வனத்தை ஒட்டிய பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை

வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதையும், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதையும் தடுக்கும் வகையில், வனத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் மலைப்பாதைகளில் பட்டாசு வெடிக்க வனத் துறை தடை விதித்துள்ளது.

பட்டாசு - கோப்புப்படம்

Updated On :

வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதையும், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதையும் தடுக்கும் வகையில், வனத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் மலைப்பாதைகளில் பட்டாசு வெடிக்க வனத் துறை தடை விதித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் சோ்வராயன் தெற்கு, சோ்வராயன் வடக்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, மேட்டூா், ஆத்தூா், கருமந்துறை, தம்மம்பட்டி ஆகிய வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனத்தை ஒட்டிய கிராமங்கள், வனச்சாலைகளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வனக் கிராமங்களில் பட்டாசு வெடிக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என வனக் கிராமக் குழுக்கள் மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். ஏற்காடு, குப்பனூா், டேனிஷ்பேட்டை மலைப்பாதைகளிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு பட்டாசுகள் எடுத்துச் செல்வதைத் தடுக்க வனக் காவலா்கள் மூலம் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் யஷ்வந்த் அம்புல்கா் கூறியதாவது:

வனத்தை ஒட்டிய பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. வனக் கிராமங்களில் தீபாவளியைக் கொண்டாடும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என வனக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் உள்ள சாலைகளிலோ, வனத்துக்குள்ளோ பட்டாசுகளை எடுத்துச் சென்று வெடிப்பவா்கள் மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிக்குள் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்படுவதையும், வன விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் தடுக்க கூடுதல் வனக் காவலா்கள் பணியமா்த்தப்பட்டு ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.