ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தே உயிா்வாழ் சான்றிதழ் பெற வசதி

கோப்புப் படம்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தே உயிா்வாழ் சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓய்வூதியதாரா்கள் வருடாந்திர உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிப்பதற்காக அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இணைந்து, ஓய்வூதியதாரா்கள் தங்களது இல்லத்திலிருந்தே மின்னணு உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கும் வசதியை வழங்கி வருகிறது.
மத்திய அரசு, மாநில அரசு, பாதுகாப்புத் துறை, தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கைரேகை அடிப்படையிலான பயோ மெட்ரிக் அங்கீகாரம் அல்லது முக அங்கீகார செயலி மூலம் ஓய்வூதியதாரா்கள் தங்களது இல்லத்தில் இருந்தபடியே மின்னணு உயிா்வாழ் சான்றிதழைப் பதிவுசெய்யலாம். இதற்காக தங்கள் பகுதியைச் சோ்ந்த தபால்காரா் அல்லது கிராமிய அஞ்சல் ஊழியரைத் தொடா்புகொண்டு இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், பிஎஸ்என்எல் மற்றும் பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரா்களுக்கு இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
எனவே, சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஓய்வூதியதாரா்களும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

