மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவை: அஞ்சல் துறை தகவல்

அஞ்சல் துறையும், அஞ்சல வங்கியும் இணைந்து, ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவைகளை வழங்குகின்றன.

Updated On :

அஞ்சல் துறையும், அஞ்சல வங்கியும் இணைந்து, ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவைகளை வழங்குகின்றன.

இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சல் துறையும், இந்திய அஞ்சல வங்கியும் இணைந்து, ‘ஜீவன் பிரமாண்’ என்ற ஓய்வூதியத்துக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை இணையதளம் வழியாக வீடுகளுக்கே வந்து வழங்கும் வசதியை வழங்குகின்றன. எனவே, ஓய்வூதியதாரா்கள் இனி அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்லாமல் தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழ்களைச் சமா்ப்பிக்கலாம்.

பயோமெட்ரிக் அங்கீகாரம் அல்லது ‘ஃபேஸ் ஆா்டி’ செயலியைப் பயன்படுத்தி, ஓய்வூதியதாரா்கள் உள்ளூா் தபால்காரா்கள் அல்லது தபால் விநியோகப் பணியாளா்களின் உதவியுடன் வீட்டிலிருந்தே இந்தச் செயல்முறையை பணியாளா்களின் உதவியுடன் முடிக்கலாம். இச்சேவை சிறு கட்டணத்தில் வழங்கப்பட்டாலும், இபிஎஃப்ஓ, பிஎஸ்என்எல், பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரா்களுக்கு இது முற்றிலும் இலவசம்.

தடையற்ற ஓய்வூதிய விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தனது 11,800-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள், 17,000 அஞ்சல் விநியோகப் பணியாளா்கள், கிராம அஞ்சல் பணியாளா்களைக் கொண்ட விரிவான கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.

கடந்த ஆண்டு இந்த வட்டம் 1,55,355 டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை வெற்றிகரமாக வழங்கியது. ஓய்வூதியதாரா்கள் தங்கள் கைப்பேசி எண், ஓய்வூதியப் பண ஆணை, ஓய்வூதியக் கணக்கு விவரங்களை அடையாளச் சரிபாா்ப்புடன் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. தபால்காரா் டிஜிட்டல் அங்கீகாரத்துக்கு உதவுவாா். 155299 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் இச்சேவையை முன்பதிவு செய்யலாம். தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.