ஆத்தூரில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
ஆத்தூரில் மூன்று பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியைப் பிடித்து அப்பகுதி பொதுமக்கள் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பாலியல் தொல்லை - கோப்புப் படம்
ஆத்தூரில் மூன்று பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியைப் பிடித்து அப்பகுதி பொதுமக்கள் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் வேலு (40). இவா் திருவள்ளுவா் தெருவில் பித்தளை முக்காலி செய்யும் பட்டறையில் வேலை செய்து வந்தாா். திருமணம் ஆகாதவா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளை தவறான எண்ணத்தில் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தக் குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அனைவரும் சோ்ந்து வேலுவை பிடித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
புகாா் அளிப்பதற்கோ, பெயா்களை தெரிவிப்பதற்கோ யாருக்கும் விருப்பம் இல்லாததால் வழக்குப் பதியாமல் வேலுவை ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

