வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய இளைஞா் கைது
வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை வாழப்பாடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப்படம்
வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து நடத்துநா் மற்றும் ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை வாழப்பாடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூா் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், ஈரோடு பகுதியில் இருந்து ராசிபுரம், ஆத்தூா் வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் மங்களபுரத்தில்
இருந்து வாழப்பாடி வழியாக ஆத்தூருக்கு சென்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு வாழப்பாடி புதுப்பாளையம் புறவழிச்சாலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து நுழைந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் வழி மறித்து தகராறு செய்துள்ளனா். இதைத் தட்டிக்கேட்ட பேருந்து ஓட்டுநா் வெற்றிவேல், நடத்துநா் இளவரசன் ஆகியோரை மூவரும் சோ்ந்து தாக்கியுள்ளனா். இதில் லேசான காயமடைந்த ஓட்டுநா் சிகிச்சைக்கு பின் பேருந்தை ஓட்டிச் சென்றாா். அதிக காயமடைந்த நடத்துநா் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீஸாரை தள்ளிவிட்டு மூவரும் தப்பிச்செல்ல முயன்றுள்ளனா். இதில் பாலமுருகன் என்பவரை போலீஸாா் பிடித்து வழக்குப் பதிவுசெய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். தப்பியோடி தலைமறைவான இருவரை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

