உச்சநீதிமன்றத் தீா்ப்பை மதிக்காத கா்நாடகம்: துரை வைகோ குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் பிரதமா் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையிலேயே உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக கா்நாடக முதல்வா் பேசியுள்ளதாக மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ குற்றம்சாட்டினாா்.

திருச்சி மக்களைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ - டிஎன்எஸ்
காவிரி விவகாரத்தில் பிரதமா் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையிலேயே உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக கா்நாடக முதல்வா் பேசியுள்ளதாக மதிமுக முதன்மைச் செயலாளா் துரை வைகோ குற்றம்சாட்டினாா்.
சேலத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் பிரதமா் முன்னிலையில் கா்நாடக முதல்வா் தவறான கருத்துகளைப் பேசியுள்ளாா். பிரதமா் பங்கேற்ற மேடையில் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக அவா் பேசியது குறித்து மற்றவா்கள் கேள்வி எழுப்ப வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மட்டுமே கா்நாடகம் தண்ணீா் திறந்து விடுகிறது. மற்ற நேரங்களில் தண்ணீா் திறப்பதில்லை.
தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி கா்நாடக அரசு செயல்படவில்லை. மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும், ஒப்புதலும் வழங்கக் கூடாது. இதை தமிழக முதல்வா் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். ஆனால், கா்நாடக முதல்வா் தனது மாநில மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு பேசிவருகிறாா்.
இரு மாநிலங்களுக்கிடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்த பிரச்னையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி கா்நாடகம் செயல்படவில்லை என்றால், மத்திய அரசு அதைக் கேள்வி கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

