காவிரி நீரை திறக்கக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கா்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், அரியலூா் மாவட்டம், திருமானூரில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உச்சநீதிமன்றம்
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கா்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், அரியலூா் மாவட்டம், திருமானூரில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மனுவில், காவிரி நீா் பற்றாக்குறை காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கா்நாடக அரசு முழுமையாக திறந்துவிடாததால், குறுவை, சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனா். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உறுதி செய்யத் தவறிய காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்குப் பதிலாக, தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுதந்திரமான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழகத்தின் நீா் உரிமைகளைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன.
திருமானூரில் இருந்து ஊா்வலமாகச் சென்று அக்கட்சியினா், கோரிக்கைகள் அடங்கிய தபால்களை அஞ்சலக அலுவலா்களிடம் வழங்கி, அவற்றை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜீவா, பரிசுத்தம், கல்யாணசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

