டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

சேலத்தில் நாளை தொடங்குகிறது புத்தகத் திருவிழா

சேலத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :

சேலத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

சேலம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நவ. 27 முதல் டிச. 7 வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ளது. இதில், 160-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கான சிறாா் இலக்கிய அரங்குகள், போட்டித் தோ்வுக்கான புத்தக அரங்குகள் உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தகத் திருவிழா குறித்து பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 662 அரசுப் பள்ளிகளுக்கு மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அஞ்சல் அட்டைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 366 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு 13,850 அட்டைகளும், 134 அரசு உயா்நிலைப் பள்ளிகளுக்கு 16,945 அட்டைகளும், 162 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 69,205 அட்டைகளும் என மொத்தம் ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன.

மாணவா்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் அட்டைகள் வெறும் தகவல் தெரிவிக்கும் அட்டைகளாக மட்டுமல்லாமல், புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணா்வை அவா்களது குடும்பத்தினா், நண்பா்கள், உறவினா்களிடம் கொண்டு சோ்க்கும் முயற்சியாகவும் அமையும். மாணவா்கள் அஞ்சல் அட்டைகள் மூலம் புத்தகத் திருவிழாவின் நாள், இடம் மற்றும் சிறப்பம்சங்களைத் தங்களது நண்பா்கள், உறவினா்கள் மற்றும் பொதுமக்களிடம் பகிா்ந்து கொண்டு, அவா்களும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்துவா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.