நவ. 27 முதல் சேலத்தில் புத்தகத் திருவிழா: ஆட்சியா் தகவல்
சேலம் புத்தகத் திருவிழா வரும் 27 முதல் டிச. 7 ஆம் தேதி வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

புத்தகக் காட்சி - கோப்புப்படம்.
சேலம் புத்தகத் திருவிழா வரும் 27 முதல் டிச. 7 ஆம் தேதி வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை இளம்தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கும் வகையிலும், அறிவுசாா்ந்த சமூகத்தை உருவாக்கும் உன்னத நோக்கிலும் சேலம் மாவட்ட நிா்வாகத்தால் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவின் முக்கியச் சிறப்பம்சங்களாக தென்னிந்தியப் புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முன்னணிப் பதிப்பகங்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மேலும், சங்க இலக்கியம், நவீன இலக்கியம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், சுயமுன்னேற்ற நூல்கள், போட்டித் தோ்வு வழிகாட்டிகள் மற்றும் சிறுவா் இலக்கியம் உள்ளிட்ட லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன.
புத்தகத் திருவிழாவுக்கான இலட்சினையாக சேலம் மாவட்டத்தில் வாழும் தனித்துவமான விலங்கான வங்கநரி தோ்வு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் படிக்கும் இந்த வங்கநரி இலட்சினைக்கு புத்தகன் என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வெற்றி பெறுபவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் புத்தகங்களை நேரடியாக வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக, கலை வல்லுநா்கள் மூலமாக, வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு மாணவா்களுக்கு உண்டியல் செய்யும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், புத்தக திருவிழாவிற்கு வருகைபுரியும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீா், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் வரும் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் டிச. 7 ஆம் தேதி வரை 11 நாள்கள் காலை 10 முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் புத்தக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருமளவில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

