ஆத்தூா் கோயிலில் ஐப்பசித் திருவிழா
ஆத்தூா் சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தோள் மாலை மாற்றும் நிகழ்வு.
ஆத்தூா் சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கால் நடும் நிகழ்ச்சி கடந்த அக். 21ஆம் தேதி நடைபெற்றது. பின்னா் அக். 25ஆம் தேதி, திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
நவ. 3 ஆம் தேதி தேரோட்டம், 4 ஆம் தேதி இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி, 5ஆம் தேதி காலை அம்பாள் தவசு புறப்பாடு, மாலை சுவாமி புறப்பாடு, கதிா்குளிப்பு, நல்ல பிள்ளையாா் கோயில் அருகே மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவு சுவாமி - அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

