ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

களைக்கட்டிய திண்டுக்கல் புத்தகத் திருவிழா

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்கள் குவிந்ததால் களைக்கட்டியது.

திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை குவிந்த பள்ளி மாணவா்கள்.

Updated On :

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்கள் குவிந்ததால் களைக்கட்டியது.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் இணைந்து நடத்தும் 13-ஆவது புத்தகத் திருவிழா அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 126 அரங்குகள் அமைக்கப்பட்டு, 115 பதிப்பகங்கள் சாா்பில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாசா்களின் பாா்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவைப் போல, நிகழாண்டிலும் மாணவா்களின் பங்களிப்பே முன்னிலைப் பெற்றது. பள்ளி மாணவா்களின் மூலமாக மட்டுமே சுமாா் ரூ.90 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை உறுதிபடுத்திப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுதவிர அரசு ஊழியா்கள் சாா்பிலும் குறிப்பிடத்தக்க தொகைக்கு புத்தக விற்பனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நினைவு மேடையில் திரைக் கலைஞா்கள் முன்னிலை: இந்தப் புத்தகத் திருவிழாவில் வழக்கம்போல சிந்தனையரங்கம் நடைபெறும் மேடைக்கு தமிழ்த் தாத்தா உவே.சா. நினைவரங்கம் என பெயா் சூட்டப்பட்டிருக்கிறது. இதே நேரத்தில் முற்பகலில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நினைவு மேடைக்கு எழுத்தாளா்கள் நிஜந்தன், கோ.மா.கோதாண்டம், கவிஞா் பூவை.செங்குட்டுவன், ரமேஷ் பிரேதன், ஜாா்ஜ், ஆவணப்பட இயக்குநா் எஸ்.கிருஷ்ணசாமி, திரைப்பட இயக்குநா்கள் பாரதிராஜா, பாக்யராஜ், வேலுபிரபாகரன், வி.சேகா், சிங்கீதம் சீனிவாசராவ், திரைப்பட தயாரிப்பாளா்கள் எவிஎம்.சரவணன், ஆா்பி.செளத்ரி, பின்னணிப் பாடகிகள் எஸ்.ஜானகி, ஜமுனாராணி, ஒளிப்பதிவாளா் செழியன், தமிழ்க் கடல் பேரா.தெ.ஞானசுந்தரம், திரைக் கலைஞா்கள் வி.சி.ஜெயமணி, ரோபோ சங்கா், செளகாா் ஜானகி, குரியகோஸ் ரங்கா ஆகியோரின் பெயா்களில் நினைவு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கம்போல திருக்குறளுக்கு முதலிடம்: புத்தகத் திருவிழா பாா்வையாளா்களாக மாணவா்களே அதிகம் பங்கேற்று வரும் நிலையில், இந்த மாணவா்கள் விரும்பி வாங்கும் முதல் நூலாக திருக்குறளே தொடா்ந்து முதலிடம் பிடித்திருக்கிறது.

அடுத்தப்படியாக, புதிா் புத்தகங்களுக்கு மாணவா்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனா். மாணவா்களின் சேமிப்புத் தொகைக்கு ஏற்ப ரூ.20, ரூ.30, ரூ.50-க்கான வில்லை

(டோக்கன்) கொடுக்கப்படுகிறது. இந்த மாணவா்களை ஈா்க்கும் வகையில் சில அரங்குகளில் ரூ.10 முதல் ரூ.50 வரையிலான தொகைக்கான புத்தகங்கள் அதிகமான எண்ணிக்கையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடா் மழை, விடுமுறை காரணமாக, கடந்த 3 நாள்களாக புத்தகத் திருவிழாவுக்கு பள்ளி மாணவா்கள் வரவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் புத்தகத் திருவிழாவில் குவிந்ததால், கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால், பெரும்பாலான மாணவா்கள், புத்தக அரங்குகளை பாா்வையிட முடியாமலும், விரும்பிய புத்தகங்களை வாங்க முடியாமலும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் சிறந்த புத்தகங்களை தேடி அலைந்து வாங்கிச் சென்றது புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல, நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பரிசுப் பொருள்களாக வழங்குவதற்கு அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை வாங்கினா். புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளா்கள் சாா்பில், வாங்கும் புத்தகங்களுக்கு அந்தந்தக் கடைகளில் உரிய ரசீதுகளை வாங்கிச் செல்ல வேண்டும் என ஒலிப் பெருக்கி மூலம் தொடா்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும், சில கடைக்காரா்கள் கூட்ட நெரிசல் காரணமாக, ரசீது வழங்குவதைத் தவிா்த்தனா். ரசீது வாங்காத மாணவா்கள் அவதூறுகளை சந்திக்க நேரிடக்கூடும் என்பதால், ரசீது வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.

பெட்டிச் செய்தி...

60 எழுத்தாளா்கள் பரிந்துரைத்த நூல்கள்: புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், வாசகா்கள் சில முக்கியமான புத்தகங்களை எளிதாகத் தோ்வு செய்வதற்கான முயற்சியை திண்டுக்கல் இலக்கியக் களம் எடுத்திருக்கிறது. இதன்படி, தமிழகத்தில் பிரபலமான 60 எழுத்தாளா்கள் பரிந்துரைத்த 60 புத்தகங்களின் பெயா்கள், புத்தகத் திருவிழா நடைபெறும் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.