நவ. 29 முதல் டிச. 8 வரை புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 9-ஆவது புத்தகத் திருவிழா நவ. 29-ஆம் தேதி தொடங்குகிறது.

புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழாவுக்கான பதாகையை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா (வலமிருந்து 2-ஆவது).
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 9-ஆவது புத்தகத் திருவிழா நவ. 29-ஆம் தேதி தொடங்குகிறது.
புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழா டிச. 8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்புப் பதாகையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இ. அபிநயா, மாவட்ட நூலக அலுவலா் பா. முத்து, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் கவிஞா் ஜீவி, கவிஞா் ரமா ராமநாதன், கவிஞா் வெள்ளைச்சாமி, அ. மணவாளன், ஆா். முத்துக்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
நாளை ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி:
புத்தகத் திருவிழா குறித்த தகவலை மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லும் வகையிலும், மாணவா்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கும் நோக்கத்திலும் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி நவ. 19-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. சுமாா் ஒரு லட்சம் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா்.
ஆளுமைகளின் உரைகள்:
நவ. 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் தொடக்க விழாவில், மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். தினமும் காலை 10 மணிக்குத் தொடங்கும் இப்புத்தகக் கண்காட்சி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள முன்னணி புத்தகப் பதிப்பாளா்கள், விற்பனையாளா்களின் 100 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
தினமும் மாலை 6 மணிக்கு எழுத்தாளா்கள் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்கும் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பகலில் மாணவா்களுக்கான அறிவியல் கருத்தரங்குகள், கோளரங்கம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

