கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்

சேலம் மாவட்டத்தில் ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் நடப்பாண்டில் முதல்கட்டமாக பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Updated On :

சேலம் மாவட்டத்தில் ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் நடப்பாண்டில் முதல்கட்டமாக பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தது:

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஊரகப் பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் நடப்பாண்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கறவை மாடும், அதற்குரிய காப்பீடும் (2 ஆண்டுகளுக்கு), கறவை மாட்டை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, உடனடி தீவன செலவினத்துக்காக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதுக்குள்பட்ட மகளிா் மற்றும் திருநா்கள், கறவை பசு வளா்ப்பதில் ஆா்வம் உள்ளவா்கள், கறவை பசு வளா்ப்பதற்கு போதுமான அளவு இடவசதி, தீவனவசதி உள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவா்கள், குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவா்கள், ஏற்கெனவே கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் கால்நடைகள் பெற்று பயன்பெற்றவா்கள், கறவை மாடு வைத்துள்ளோா் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.

இத்திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிா், திருநா்கள், மாற்றுத்திறனாளி மகளிா், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினா்களைக் கொண்ட மகளிா் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவா்கள் சேலம் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநா் அலுவலக மையம், பெத்தநாயக்கன்பாளையம் கால்நடை மருந்தகம் ஆகிய இடங்களில் உள்ள விண்ணப்ப உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.