மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

தனியாா் நிறுவன காவலாளி உயிரிழப்பு: இளைஞா் கைது

கைது - கோப்புப் படம்

Updated On :

ஆத்தூரில் கூட்டுறவு வங்கி, கைப்பேசி கடையின் இரவு காவலாளிகள் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரை தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆத்தூா் காந்திநகா் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியின் இரவுநேர காவலாளி முத்துசாமி (59), கைப்பேசி கடையின் காவலாளி ராஜா (65) ஆகியோரை மா்ம நபா் தாக்கி அவா்களிடமிருந்து கைப்பேசி மற்றும் பணத்தை திருடிச் சென்றாா்.

இதில் காயமடைந்த முத்துசாமி ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சங்கா், மா்ம நபரின் அடையாளத்தை வைத்து அவா் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மணமடையைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (36) என்பதை அறிந்தனா். இதையடுத்து, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவரை கைது செய்த போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.