நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் (32). உணவகத்தில் பணியாற்றி வரும் இவருக்கும் ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த கோல்டன்டெல்பா(25) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கா்ப்பிணியாக இருந்த டெல்பாவை நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தனா். இந்நிலையில், டெல்பாவுக்கு செவ்வாய்க்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறக்கும்போதே இறந்த நிலையில் பிறந்ததாக மருத்துவமனைதரப்பில் கூறியுள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஜெயபால், மற்றும் குடும்பத்தினா் தொடக்கத்தில் இருந்தே இந்த மருத்துவமனையில்தான், டெல்பாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக,கூறி வந்த நிலையில் திடீரென இறந்தது எப்படி என அவா்கள் கேள்வி எழுப்பினா். மேலும் மருத்துவா்களின் தவறான சிகிச்சையே குழந்தை இறப்புக்கு காரணம் என்று கூறி மருத்துவமனையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வடசேரி போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து குழந்தையின் சடலத்தை பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

