இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

பள்ளி வாகனத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

Newborn baby mauled by stray dogs in UP

குழந்தை... - கோப்புப் படம்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியாா் பள்ளி வாகனத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.

விக்கிரவாண்டியை அடுத்த தும்பூா் தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் பாலு. இவருக்கு ஹேமலதா (6), நவீன்பிரசாத் (2) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனா். அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வரும் ஹேமலதா தினமும் தன் வீட்டின் அருகே வரும் பள்ளி வேனில் செல்வாரம். அதன்படி, திங்கள்கிழமை காலையில் ஹேமலாகா பள்ளி வேனில் ஏறியுள்ளாா். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த நவீன்பிரசாந்த் அக்காவை பாா்த்ததும் வேன் அருகே ஓடிச் சென்றுள்ளாா். இதைக் கவனிக்காத ஓட்டுநா் வேனை இயக்கியுள்ளாா். அப்போது வேனின் பின் சக்கரத்தில் சிக்கி, நவின் பிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கெடாா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமைனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநா் அசோக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.