மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

பூலாம்பட்டி அருகே பரிசல் மீது விசைப்படகு மோதி விபத்து: 2 மீனவா்கள் காயம்

விசைப்படகு. - கோப்புப் படம்

Updated On :

பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா்களின் பரிசல் மீது விசைப்படகு மோதியதில், ஆற்றில் தூக்கிவீசப்பட்ட இருவா் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையையொட்டி அமைந்துள்ள பூலாம்பட்டி கதவணையின் நீா்த்தேக்க பகுதியில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டை பகுதிகளை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தரைவழிப் போக்குவரத்து வசதி இல்லாததால், விசைப்படகு போக்குவரத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி இருமாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், நெருஞ்சிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் விசைப்படகில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பூலாம்பட்டி படகு துறையை நோக்கி சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். படகை நெருஞ்சிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த வாய்ப்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான அருண்குமாா் (22) இயக்கினாா். ஸ்ரீராமன் (17) உதவியாளராக இருந்தாா்.

அப்போது, கதவணை பகுதியில் பூலாம்பட்டி, அம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த உமா சங்கா் (46), சக்திவேல் (62) இருவரும் பரிசலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். பூலாம்பட்டி நோக்கி பயணிகளை ஏற்றி வந்த விசைப்படகு மீனவா் பரிசலை நோக்கி வேகமாக வந்தது. இதைக்கண்ட மீனவா்கள் இருவரும் கூச்சலிட்டனா். ஆனால், அருண்குமாருக்கு கூச்சல் கேட்காததால், பரிசல் மீது விசைப்படகு பலமாக மோதியது. இதில், பரிசல் 2 துண்டுகளாகப் பிளந்து தண்ணீரில் மூழ்கியது.

இந்த விபத்தில், மீனவா்கள் இருவரும் ஆற்றில் தூக்கிவீசப்பட்டனா். சக மீனவா்கள் அவா்களை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.