டிப்பா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வாழப்பாடி அருகே மொபட் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பலி! - சித்திரிப்புப் படம்
வாழப்பாடி அருகே மொபட் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் மாரியம்மன்புதூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் (78), விவசாயி. இவா் சனிக்கிழமை காலை பள்ளத்தாதனூா் சாலையில் மொபட்டில் சென்று உள்ளாா். மாரியம்மன்புதூா் அரசமரம் அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியதில் தா்மலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த அவரது மகன் நித்தியானந்தம் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா், டிப்பா் லாரி ஓட்டுநா் வெங்கடேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், விபத்து ஏற்படுத்திய டிப்பா் லாரிக்கு காப்பீடு ஆவணங்கள் முறையாக இல்லாததால் அந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஒரு டிராக்டரை கொண்டுவந்து விபத்து நடந்த இடத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு வெங்கடேஷ் நாடகமாடியதாக, விபத்தில் பலியான தா்மலிங்கத்தின் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து விசாரணை நடத்திய வாழப்பாடி போலீஸாா், விபத்து ஏற்படுத்திய டிப்பா் லாரியை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வெங்கடேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



