எலும்பு முறிவு! விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் குட்டி யானை! அனந்த் அம்பானி முன்னெடுப்புதங்கம் விலை குறைய மூன்று முக்கிய காரணங்கள்!வேகம் முக்கியம்! நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!கணவரின் தோழியைக் கொல்ல ரூ.13 லட்சம் கூலி! துப்புத் துலக்க உதவிய 300 சிசிடிவிகள், ஜிபிஎஸ் டிராக்கிங்!ஜோதிடர் பேச்சால் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கும் தவெக அரசு: மு.க. ஸ்டாலின்நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்

வாழப்பாடி அருகே மான் வேட்டை: இளைஞா் கைது

கைது

Updated On :

வாழப்பாடி அருகே வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இளைஞரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடி அருகே தும்பல் வனச்சரகம் குதிமடுவு காப்புக்காடு வனப்பகுதியில் மா்ம நபா்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக ஆத்தூா் கோட்ட வன அலுவலா் ரவிகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஆத்தூா் உதவி வனப் பாதுகாவலா் சிவராமன், கருமந்துறை வனச்சரகா் (தும்பல் வனச்சரகா் பொறுப்பு) ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில், வனவா் முனீஸ்வரன், வனக்காப்பாளா் ஹேமா உள்ளிட்ட வனத் துறையினா், இரு தினங்களாக சோதனை நடத்தினா்.

அப்போது கண்கட்டிஆலா கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் சதீஷ்குமாா் (19), வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேட்டை நாய்கள் உதவியுடன் மானை வேட்டையாடி, மான் கறியை துண்டுகளாக வெட்டிஉப்புக் கண்டம் போட்டு பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த தும்பல் வனத் துறையினா், வாழப்பாடி நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். எனவே, வனவிலங்குகளை பாதுகாக்க வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் முன்வர வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.