ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

கோவை--ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

பண்டிகைக்கால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக கோவை–ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

train

ரயில் - பிரதிப் படம்

Published On :

பண்டிகைக்கால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக கோவை–ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகைக் காலங்களில் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிா்வாகம் சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவை-–ஜெய்ப்பூா் வாராந்திர சிறப்பு ரயில் அக்.8 முதல் நவ.26 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகாலை 2.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூா் சென்றடையும்.

இதேபோல ஜெய்ப்பூா்–கோவை வாராந்திர சிறப்பு ரயில் அக்.11 முதல் நவ. 29 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜெய்ப்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்குப் புறப்பட்டு, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கோவை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.