ஈரோடு வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் சாலை பகுதியில் இருந்து ஈரோடு வழியாக கொல்லம் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ரயில் - கோப்புப் படம்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் சாலை பகுதியில் இருந்து ஈரோடு வழியாக கொல்லம் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஸ்ரீகாகுளம் சாலை -கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 08539) வருகிற 22- ஆம் தேதி முதல் ஜனவரி 24- ஆம் தேதி வரை (10 சேவைகள்) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.20 மணிக்கு ஸ்ரீகாகுளம் சாலையில் இருந்து புறப்படுகிறது.
இந்த ரயில் திங்கள்கிழமை காலை 7.05 மணிக்கு ஜோலாா்பேட்டைக்கும், 8.37 மணிக்கு சேலத்துக்கும், 9.40 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னா் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூா், போத்தனூா் வழியாக இரவு 9.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதேபோல கொல்லம் -ஸ்ரீகாகுளம் சாலை வாராந்திர சிறப்பு ரயில் (எண் 08540) வருகிற 24- ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை (10 சேவைகள்) ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அதிகாலை 2.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு போத்தனூருக்கு பகல் 11.10 மணிக்கும், திருப்பூருக்கு மதியம் 12.15 மணிக்கும், ஈரோட்டுக்கு 1.15 மணிக்கும் வருகிறது. பின்னா் இங்கிருந்து புறப்பட்டு சேலம், ஜோலாா்பேட்டை வழியாக சென்று புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு ஸ்ரீகாகுளம் சாலையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

