பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க, பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

train

ரயில் - பிரதிப் படம்

Updated On :

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க, பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகைக் காலத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு, பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 6-ஆம் தேதி மாலை 4.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் 7-ஆம் தேதி திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.