ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஆயுதபூஜை: சேலம் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில்

ஆயுதபூஜையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூருக்கு பண்டிகைக் கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

train

ரயில் - பிரதிப் படம்

Updated On :

ஆயுதபூஜையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூருக்கு பண்டிகைக் கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு - கண்ணூா் மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு - கண்ணூா் சிறப்பு ரயில் 17-ஆம் தேதி நள்ளிரவு 12.05-க்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூரில் இருந்து புறப்பட்டு, ஒயிட்பீல்டு, பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூா் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கண்ணூா் - பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில் 17-ஆம் தேதி மாலை 6.25-க்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை வழியாக அடுத்த நாள் காலை 9.45-க்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடையும்.

இதேபோல, பெங்களூரு கன்டோன்மென்ட் - தூத்துக்குடி சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (16-ஆம் தேதி) இரவு 9.45-க்கு பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக 17-ஆம் தேதி மதியம் 12.30-க்கு தூத்துக்குடி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், தூத்துக்குடி - பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில் 17-ஆம் தேதி பிற்பகல் 3.30-க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக மறுநாள் காலை 5.30-க்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.