சேலம் வழியாக பெங்களூரு - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் - பிரதிப் படம்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
விநாயகா் சதுா்த்தியையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், ரயில்வே நிா்வாகம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெங்களூரு - திருநெல்வேலி இடையே சேலம், நாமக்கல், கரூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கே.எஸ்.ஆா். பெங்களூரு - திருநெல்வேலி இடையே செப். 11-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கே.எஸ்.ஆா். பெங்களூரில் இருந்து செப். 11-ஆம் தேதி இரவு 11.35-க்கு புறப்பட்டு பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக செப். 12-ஆம் தேதி மதியம் 1.15-க்கு திருநெல்வேலி சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், திருநெல்வேலி - பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் செப். 12-ஆம் தேதி இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3.45-க்கு புறப்படும் இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக செப். 13-ஆம் தேதி அதிகாலை 3.30-க்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





