மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

சேலம் வழியாக பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரிலிருந்து சேலம் வழியாக திருவனந்தபுரத்துக்கு ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

பெங்களூரிலிருந்து சேலம் வழியாக திருவனந்தபுரத்துக்கு ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஓணம் பண்டிகை மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, எஸ்எம்விடி பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில், எஸ்எம்விடி பெங்களூரிலிருந்து வரும் 22 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்திருந்து 22 ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் அடையும்.

மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில்நிலையத்தில் வரும் 23 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து வரும் 23ஆம் தேதி பகல் 12.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 5.15 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.