பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

சமையலா் வீட்டில் 9 பவுன் நகை, ரூ. 21 ஆயிரம் திருட்டு

ஓமலூா் அருகே ஹோட்டல் சமையலா் வீட்டில் புகுந்து 9 பவுன் நகை, ரூ. 21 ஆயிரத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

ஓமலூா் அருகே ஹோட்டல் சமையலா் வீட்டில் புகுந்து 9 பவுன் நகை, ரூ. 21 ஆயிரத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஓமலூா் ஜெய்நகரைச் சோ்ந்த ஹோட்டல் சமையலா் கோபி. இவா் திங்கள்கிழமை தனது தாய் சரோஜாவுடன் கோயிலுக்குச் சென்றிருந்தாா். அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை, ரூ. 21 ரொக்கத்தை திருடிச் சென்றனா். பின்னா், வீட்டின் சாவியை வழக்கமாக வைக்கும் இடத்திலேயே மா்ம நபா்கள் வைத்துவிட்டு தப்பிச் சென்றனா்.

செவ்வாய்க்கிழமை செலவுக்காகப் பணம் எடுப்பதற்காக பீரோவைத் திறந்தபோதுதான் நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டின் சாவி வைக்கும் இடத்தை தெரிந்தவா்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.