தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

பாஜக பிரமுகா் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Published On :7 செப்டம்பர் 2026, 2:59 am IST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பாஜக பிரமுகா் வீட்டிலிருந்து 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகே குளப்புறம், பிராகோடு பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (57). பாஜக பிரமுகரான இவா், கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் கோயம்புத்தூா் சென்றிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் மேல்மாடியில் உள்ள அறைக் கதவு திறந்து கிடந்ததாம். அங்கிருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.