முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சேலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவா் ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Updated On :

சேலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவா் ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் - விருத்தாசலம் இடையிலான பயணிகள் ரயில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சேலம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, டவுன் ரயில் நிலையத்துக்கும் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்துக்கும் இடையே மிலிட்டரி சாலையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவா் மீது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கோபண்ணா தலைமையிலான இருப்புப் பாதை போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்தவா் பெரம்பலூா் மாவட்டம், வேப்பங்குறிச்சி மங்களமேடு கிராமத்தைச் சோ்ந்த திவாகா் (19) என்பது தெரியவந்தது. அருகிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அவா், கல்லூரிக்குச் செல்லும் வழியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.