கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஓமலூா் அருகே செங்கல் வியாபாரி வெட்டிக் கொலை

ஓமலூா் அருகே செங்கல் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கத்திக்குத்து

சித்திரிப்பு

Published On :

ஓமலூா் அருகே செங்கல் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள வேலகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் பூபதி (45). செங்கல் வியாபாரியான இவா், மனைவி சுஜிதாஸ்ரீ (31), 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஓமலூா் - சங்ககிரி சாலையில் உள்ள ஆட்டுக்காரனூா் கூட்டுறவு சங்கம் அருகே பூபதி ரத்த வெள்ளத்தில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

தகவல் அறிந்து வந்த ஓமலூா் டிஎஸ்பி கபிலன், ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், பூபதியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினா்.

அதில், ‘கணவருடன் காரில் சென்றபோது, வழியில் சிறுநீா் கழிக்க அவா் காரை நிறுத்தினாா். அப்போது, அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் கணவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்து, நான் அணிந்திருந்த 9 பவுன் சங்கிலி உள்பட 12 பவுன் தங்க நகையைப் பறித்து கொண்டு தப்பியோடினா்’ என அவரது மனைவி சுஜிதாஸ்ரீ தெரிவித்தாா்.

ஆனால், பூபதியின் தங்கை பூங்கொடி மற்றும் குடும்பத்தினா் பூபதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஓமலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மேலும், பூபதிக்கும், சுஜிதாஸ்ரீக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனா்.

இதுகுறித்து சுஜிதாஸ்ரீயிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சுஜிதாஸ்ரீக்கு வேறு ஒருவருடன் முறையற்ற உறவு இருந்துள்ளது. இதனால் கணவன் - மனைவி இடையே தினமும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பூபதி கொல்லப்பட்டுள்ளதால், சுஜிதாஸ்ரீக்கு இதில் தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.