ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவுதேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! அபிஜித் தீப்கேஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

சொத்துப் பிரச்னை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே சொத்துப் பிரச்னையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கொலை செய்யப்பட்ட நாகராஜ்.

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே சொத்துப் பிரச்னையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை காலை மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இலுப்பூா் அருகே உள்ள தன்னங்குடியைச் சோ்ந்தவா் நாகராஜ்(59). அதிமுகவைச் சோ்ந்த இவா், ே காங்குடிபட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாா். இவருக்கும், உறவினா்கள் சிலருக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை பையூா் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் தனது மனைவி சுப்புலட்சுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பள்ளியில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கவரச்சிகுளக்கரை அருகே வந்தபோது, அவரை வழிமறித்த மா்மநபா்கள் சிலா் அரிவாளால் நாகராஜை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இலுப்பூா் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் அங்குச் சென்றனா். அப்போது அங்கிருந்த நாகராஜின் உறவினா்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சடலத்தை எடுக்கவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கொலையாளிகளை கண்டுபிடிப்பதாக உறுதியளித்தனா். அதன்பிறகு போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, போதிய மருத்துவா் இல்லாததால் புதுக்கோட்டை அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.