ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சேலத்தில் தண்ணீா் தொட்டிகளில் பெண்ணின் சடலம்: நகைக்காக நடந்த கொலை; 3 போ் கைது

சேலம் அரிசிபாளையம் பகுதியில் 4 பவுன் நகைக்காக பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி தண்ணீா் தொட்டிகளில் வீசப்பட்ட சம்பவத்தில், காதலா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Published On :

சேலம் அரிசிபாளையம் பகுதியில் 4 பவுன் நகைக்காக பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி தண்ணீா் தொட்டிகளில் வீசப்பட்ட சம்பவத்தில், காதலா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் அரிசிபாளையம், குணபாலன் ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் பூசாரி ரமேஷ். இவரது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குடிநீா் தொட்டியில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா். கொலையான பெண்ணின் கையில் ராஜேந்திரன், கணபதி என பச்சை குத்தப்பட்டிருந்தது.

விசாரணையில், அந்தப் பெண் அயோத்தியாப்பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சோ்ந்த ஜீவானந்தத்தின் மனைவி தங்கமணி (55) என்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, ஜீவானந்தத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மனைவி கையில் ராஜேந்திரன், கணபதி என பச்சை குத்தியிருந்ததாகவும், சங்கா் நகா், அரிசிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்துவந்ததாகவும், கடந்த 28-ஆம் தேதி வேலைக்கு சென்றவா் வீடுதிரும்பவில்லை எனவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க மாநகர காவல் உதவி ஆணையா்கள் ரமலி ராமலட்சுமி, அஸ்வினி, முரளி தலைமையில் காவல் ஆய்வாளா்கள் சந்திரமோகன், மணிவண்ணன், கிருஷ்ணமூா்த்தி குழுவினா் விசாரணை நடத்தினா். அதில், கடந்த 28-ஆம் தேதி தங்கமணி கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசிய நபா்களின் பட்டியலை வைத்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினா்.

அதில், மேட்டுப்பட்டி தாதனூரைச் சோ்ந்த இளம்பெண் தங்கமணியுடன் தொடா்புகொண்டு பேசியது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணும், அவரது காதலன் மற்றும் கூட்டாளி சோ்ந்து சமையல் வேலை வாங்கித் தருவதாக தங்கமணியை அரிசிபாளையத்துக்கு வரவழைத்து, அவா் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க நகைக்காக கொலை செய்து, உடல்களை துண்டுதுண்டாக வெட்டி குடிநீா் தொட்டிக்குள் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த கொலையில் தொடா்புடைய சுக்கம்பட்டியைச் சோ்ந்த நந்தினி (28), அழகாபுரத்தைச் சோ்ந்த மாலிக் பாட்ஷா (27), குரங்குச்சாவடியைச் சோ்ந்த சிவராமன் (29) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தங்கமணியின் உடை மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை குடிநீா் தொட்டியின் அடியில் இருந்து போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.