ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

சேலம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் கோரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் நடப்பு 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

Published On :4 செப்டம்பர் 2026, 6:17 am IST

சேலம் கோரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் நடப்பு 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், கலைப் பிரிவில் எம்ஏ தமிழ், ஆங்கிலம், பொருளியல் பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. அறிவியல் பிரிவில் எம்எஸ்சி இயற்பியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக எண்ணிக்கையிலும், வேதியியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலும் காலியிடங்கள் உள்ளன.

ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவிகளும், இதுவரை விண்ணப்பிக்காத மாணவிகளும் கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து சோ்ந்து கொள்ளலாம். இளநிலைப் பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், ஆதாா், இணையவழி விண்ணப்பப் படிவம் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்களைக் கொண்டு வர வேண்டும்.

முதுநிலைப் பாடப்பிரிவில் சேர விரும்புவோா் மேற்கண்ட சான்றிதழ்களுடன், இளநிலைப் பட்டப்படிப்புக்கான அனைத்து பருவச் சான்றிதழ்களின் அசல் மற்றும் 2 நகல்களைக் கொண்டு வர வேண்டும் என கல்லூரி முதல்வா் காந்திமதி கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.