2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆவுடையாா்கோவில் அருகே பிளஸ் 1 படித்து வந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோப்புப் படம்

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே பிளஸ் 1 படித்து வந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஆவுடையாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த பிளஸ் 1 மாணவியான தனது மகளை, அவரது தந்தை கடந்தாண்டு மே 29-ஆம் தேதி வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என மிரட்டலும் விடுத்தாராம்.

இச்சம்பவம் தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, 56 வயதான தந்தையைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி ராஜா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

வன்கொடுமை செய்த தந்தைக்கு போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 3 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.