ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து   உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம், கொரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (எ) குணசேகரன் (28). இவா் அங்குள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கா்ப்பமடைந்தாா். இது தொடா்பாக

உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2021 அக்டோபா் 26- ஆம் தேதி புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சதீஷ் (எ) குணசேகரனை கைது செய்தனா்.

உதகை மகளிா் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் சதீஷ் (எ) குணசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து,  அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

மேலும் சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை  அரசு காப்பகத்தில் உள்ள நிலையில், அரசு சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை ஆட்சியா் பெற்று, அதை பிறந்த குழந்தையின் பெயரில்   வங்கியில் வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.