
சேலம் வழியாக போத்தனூா் - சம்பல்பூா் இடையே வாராந்திர விரைவு ரயில் சேவை
சேலம் வழியாக இயக்கப்படும் போத்தனூா் - சம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்
சேலம் வழியாக இயக்கப்படும் போத்தனூா் - சம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், கேரளத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்து வருகிறது. இதனால், நெரிசலைத் தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்குகிறது. அந்தவகையில், போத்தனூரில் இருந்து சேலம் வழியாக ஒடிஸா மாநிலம் சம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பல்பூா் - போத்தனூா் வாராந்திர சிறப்பு ரயில் செப். 9 முதல் நவ. 25 ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. சம்பல்பூரில் புதன்கிழமை முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், விஜயவாடா, நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், போத்தனூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் வரும் செப். 11 முதல் நவ. 27 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. போத்தனூரில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், ஈரோடு, சேலம், காட்பாடி, நெல்லூா், விஜயவாடா வழியாக அடுத்தநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






