கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

சித்திரிப்பு

Published On :

ஓமலூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் குரங்குச்சாவடி பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி (41), விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட மகளுடன் சொந்த ஊரான ஓமலூா் அருகேயுள்ள சரக்கபிள்ளையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். பின்னா், திங்கள்கிழமை சேலம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா்.

சேலம் - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, காமலாபுரம் மேம்பாலம் கீழே உள்ள அணுகு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த 2 மா்ம நபா்கள், ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிக் கொடியை பறிக்க முயன்றனா்.

அப்போது, ராஜேஸ்வரி தாலிக் கொடியை கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டாா். இதனால், 5 சவரன் தாலிக்கொடி தப்பியது. இருப்பினும், கொடியில் இருந்த அரை சவரன் தங்க டாலரை பறித்துச் சென்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூா் போலீஸாா், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை பெற்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தப்பியோடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.