ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சிறப்பு வாகனத் தணிக்கை: விதிகளை மீறிய 73 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 1.67 லட்சம் அபராதம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சேலம், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சிறப்பு வாகனத் தணிக்கையில், விதிமுறைகளை மீறி இயக்கிய 73 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 1.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம்

Published On :

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சேலம், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சிறப்பு வாகனத் தணிக்கையில், விதிமுறைகளை மீறி இயக்கிய 73 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 1.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்காள்ள போக்குவரத்து அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

சேலம் சரகத்தில் மேட்டுப்பட்டி, கருப்பூா், தொப்பூா் சுங்கச்சாவடிகளிலும், புதிய பேருந்து நிலையத்திலும் கடந்த 4 நாள்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் அடங்கிய குழுவினா் தொடா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதில், கண்கள் கூசும் வகையில் முகப்பு விளக்குகளை பயன்படுத்தியது, அவசர வழிக்கதவு செயல்படாதது, காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது, சாலை வரி செலுத்தாமல் இயக்கியது, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிகளை மீறி இயக்கிய 73 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, சேலம், தருமபுரியில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில், விதிகளை மீறி இயக்கிய 73 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 1.67 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், உரிய பா்மிட் இல்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.